/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையை எதிர்பார்த்து விவசாயிகள்.. காத்திருப்பு :நடப்பு ஆண்டில் விதை நெல் விலை மூடை ரூ.1050 ஆக உயர்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையை எதிர்பார்த்து விவசாயிகள்.. காத்திருப்பு :நடப்பு ஆண்டில் விதை நெல் விலை மூடை ரூ.1050 ஆக உயர்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையை எதிர்பார்த்து விவசாயிகள்.. காத்திருப்பு :நடப்பு ஆண்டில் விதை நெல் விலை மூடை ரூ.1050 ஆக உயர்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையை எதிர்பார்த்து விவசாயிகள்.. காத்திருப்பு :நடப்பு ஆண்டில் விதை நெல் விலை மூடை ரூ.1050 ஆக உயர்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையை எதிர்பார்த்து விவசாயிகள்.. காத்திருப்பு :நடப்பு ஆண்டில் விதை நெல் விலை மூடை ரூ.1050 ஆக உயர்வு
ADDED : செப் 25, 2025 11:20 PM

ராமநாதபுரம்: வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கும் நிலையில் முதல் போக நெல் சாகுபடி பணிகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக அனைத்து இடங்களில் துவங்கியுள்ளது. இதன் காரணமாக விதை நெல்லின் விலை மூடைக்கு ரூ.50 வரை விலை உயர்ந்து ( 30கிலோ) ரூ.1050க்கு விற்கிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரியாக 3 லட்சம் ஏக்கருக்கும் மேல் ஆண்டு தோறும் நெல் சாகுபடி நடக்கிறது. ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழையை நம்பி அக்.,க்கு முன் வயலை தயார் செய்து நெல் விதைக்கின்றனர். அவ்வப்போது மழை பெய்து வருவதால் நடப்பாண்டிற்கான முதல் போக சாகுபடி பணிகள் ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, தேவிப்பட்டினம், சத்திரக்குடி, நயினார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துவங்கியுள்ளது.
வயல்களை டிராக்டர் மூலம் உழவு செய்து நெல் விதைப்பு பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து தனியார் மற்றும் வேளாண் விரிவாக்க மையங்களில் விதை நெல் வினியோகம் துவங்கியுள்ளது. விதையை கடினப்படுத்தி விதை நேர்த்தி செய்து விதைப்பது அவசியம். திரவ உரம் பயன்பாடு குறித்தும், மானாவாரி நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வகையில் நுண்ணுயிர் தொழில் நுட்பத்தை விவசாயிகள் பயன்படுத்துமாறு வேளாண் துறை விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறது.
இதுகுறித்து காவனுார் விவசாயி கண்ணன் கூறுகையில், இவ்வாண்டு இதுவரை குறிப்பிடும் வகையில் மழை பெய்யவில்லை. மண்ணின் ஈரப்பத்தை பயன்படுத்தி நடப்பாண்டிற்கான முதல் போக சாகுபடிக்காக நிலத்தை உழுது தற்போது 3 மாதங்களில் பலன் தரும் ஆர்.என்.ஆர்., ரக நெல் ரகம் விதைக்கிறோம்.
அக்., நவ., மழையை நம்பி தற்போது அனைத்து இடங்களிலும் நெல்விதைப்பு பணி துவங்கியுள்ளதால் கடந்த ஆண்டை விட மூடைக்கு ரூ.50 விலை உயர்ந்து விதை நெல் மூடை (30 கிலோ) ரூ.1050க்கு விற்கிறது. போதுமான மழை பெய்தால் ஜனவரியில் அறுவடைக்கு வந்துவிடும் என்றார்.--