ADDED : பிப் 01, 2024 11:00 PM
தொண்டி- தொண்டி அருகே கீழகைக்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் முனியாண்டி 74, ராமன் 75. இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் அறுவடை செய்த நெல்லை டிராக்டரில் ஏற்றி வந்து இறக்கி கொண்டிருந்த போது தகராறு ஏற்பட்டது.
இருவரின் ஆதரவாளர்களும் அரிவாள், கம்பால் தாக்கிக் கொண்டனர். முனியாண்டி புகாரில் ராமன், கோட்டைசெல்வி ஆகியோர் மீதும் ராமன் புகாரில் முனியாண்டி மீதும் தொண்டி போலீசார்வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


