Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடி வைகை ஆற்றில் தசாவதார சேவையில் அழகர்: கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

பரமக்குடி வைகை ஆற்றில் தசாவதார சேவையில் அழகர்: கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

பரமக்குடி வைகை ஆற்றில் தசாவதார சேவையில் அழகர்: கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

பரமக்குடி வைகை ஆற்றில் தசாவதார சேவையில் அழகர்: கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

ADDED : மே 15, 2025 04:16 AM


Google News
Latest Tamil News
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார சேவையில் அருள்பாலித்தார்.

பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா விமரிசையாக நடக்கிறது. மே 7ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கி மே 12 அதிகாலை 3:20 மணிக்கு வைகையில் அழகர் இறங்கினார்.

காலை 9:30 மணிக்கு குதிரை வாகனத்தில் செண்பகப்பூ, மகிழம்பூ, ஏலக்காய், தாமரை மலர்கள் சூடி அலங்காரமாகிய அழகருக்கு பல்லாயிரம் பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர். தொடர்ந்து இரவு வண்டியூர் பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

பின்னர் பெருமாள் கோயிலை அடைந்தார். வழி நெடுகிலும் பக்தர்கள் அனைத்து வகையான பிரசாதங்களையும் வழங்கினர்.

நேற்று முன்தினம் இரவு சேஷ வாகனத்தில் பரமபதநாதனாக எழுந்தருளினார். அப்போது மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்து, வாணியர் மண்டகப்படியில் விடிய விடிய தசாவதார காட்சி அளித்தார்.

அப்போது அர்ச்சாவதாரம், மச்சம், கூர்மம், வாமன, பரசுராம, பலராம, கிருஷ்ணாவதாரம் மற்றும் மோகினி அவதாரங்களில் எழுந்தருளினார். வைகை ஆற்றுக்குள் கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க தரிசித்தனர். அதிகாலை 12:00 மணிக்கு துவங்கிய தசாவதார சேவை காலை 6:30 மணிக்கு நிறைவடைந்தது. தொடர்ந்து காலை 11:00 மணி முதல் சந்தனம், தயிர், பால், பஞ்சாமிர்தம் என பலவகையான அபிஷேகங்கள் நடந்தது. மகாதீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

நேற்று இரவு கருட வாகனத்தில் புறப்பாடாகிய பெருமாள் மட்டா மண்டகப்படியை அடைந்தார். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us