மங்களநாதர் சுவாமி களரி மண்டகப்படி
மங்களநாதர் சுவாமி களரி மண்டகப்படி
மங்களநாதர் சுவாமி களரி மண்டகப்படி
ADDED : மே 15, 2025 04:17 AM
உத்தரகோசமங்கை:- உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை விழா கோலாகலமாக நடந்தது. பெரிய தேரோட்டத்தை முன்னிட்டு 9ம் நாள் திருவிழா உத்தரகோசமங்கை அருகே களரி வட்டார நாடார்கள் மண்டகப்படியால் நடந்தது.
மண்டகப்படியினர் சார்பில் உற்ஸவமூர்த்திகளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் செய்யப்பட்டு நந்தி வாகனத்தில் மங்கேஸ்வரி அம்மன் நான்கு ரத வீதிகளிலும் மண்டகப்படி உபயதாரர்கள் மற்றும் பக்தர்களால் வீதி உலா நடந்தது.
ஏற்பாடுகளை களரி வட்டார நாடார்கள் செய்திருந்தனர்.