/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரம் மாம்பழ கோடவுன்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு ராமநாதபுரம் மாம்பழ கோடவுன்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு
ராமநாதபுரம் மாம்பழ கோடவுன்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு
ராமநாதபுரம் மாம்பழ கோடவுன்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு
ராமநாதபுரம் மாம்பழ கோடவுன்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு
ADDED : மே 25, 2025 08:38 AM

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் மாம்பழ கோடவுன்களில் ஆய்வு நடத்தினர். இதில் அழுகிய வாழை, மாதுளம் பழங்களை கைப்பற்றி அழித்தனர்.
ராமநாதபுரத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் உத்தரவில் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தர்மர், ஆர்.எஸ்.மங்கலம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கர்ணன், கீழக்கரை உணவு பாதுகாப்பு அலவலர் ஜெயராஜ், ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல் ஆகியோர் ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாம்பழ கோடவுன்கள், வாழைப்பழ கோடவுன்கள், மீன் கடைகள் ஆய்வு செய்யப்பட்டன.
வேதிப்பொருட்களை வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் ஏதும் இல்லை. அழுகிய மாதுளம் பழங்கள், வாழைப்பழங்கள் 7 கிலோவை பறிமுதல் செய்து அழித்தனர்.
மாம்பழங்களை வாங்கி விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், மாம்பழங்களை எப்படி பார்த்து வாங்குவது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாம்பழங்கள் பழுக்க வைக்கும் முறை குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.