ADDED : மே 25, 2025 08:35 AM
கமுதி : கமுதி அருகே பேரையூர் பூவைசிய இந்திர குல வேளாளர் சங்க நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு பூவைசிய இந்திர குல வேளாளர் மாணவர் மன்றம் சார்பில் சமூக நல்லிணக்க அமைதி ஊர்வலம் நடந்தது.
சங்கத்தில் துவங்கி பேரையூர் முக்கிய தெருக்களில் ஊர்வலமாக வந்து பெருமாள் பீட்டர் நினைவு அரங்கம் வரை 2 கி.மீ., வரை ஊர்வலமாக சென்றனர்.
இதில் சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கம், உயர்கல்வி மேம்பாடு, பொருளாதார மேம்பாடு குறித்த பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
இதில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பூவைசிய இந்திர குல வேளாளர் சங்கம் மற்றும் மாணவர் மன்றத்தினர் செய்தனர்.