/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மதுரை மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மதுரை மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
மதுரை மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
மதுரை மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
மதுரை மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
ADDED : செப் 25, 2025 11:18 PM

கீழக்கரை: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில் மதுரை மண்டல அளவிலான கூடைப்பந்து, இறகு பந்து மற்றும் ஹாக்கி போட்டிகள் செப்., 23 மற்றும் 24ல் கல்லுாரியில் நடந்தது.
பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சேக் தாவூத் தலைமை வகித்தார். போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார்.
போட்டியில் 15க்கும் மேற்பட்ட மதுரை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லுாரிகள் பங்கேற்றன. ஹாக்கி போட்டியில் மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லுாரி முதலிடமும், விருதுநகர் வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக் கல்லுாரி இரண்டாமிடத்தையும், உசிலம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மூன்றாமிடத்தையும் பிடித்தது.
இறகுப்பந்து போட்டியில் சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லுாரி முதலிடத்தையும், வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக் கல்லுாரி இரண்டாவமிடத்தையும், உசிலம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மூன்றாமிடத்தையும் பிடித்தது. கூடைப்பந்து போட்டியில் விருதுநகர் வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக் கல்லுாரி முதலிடத்தையும், தேனி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லுாரி இரண்டாமிடத்தையும், சிவகாசி பாலிடெக்னிக் கல்லுாரி மூன்றாவது இடத்தையும் பிடித்தது.
வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளை முகமது சதக் அறக்கட்டளையின் இயக்குனர் ஹபீப் முகமது சதக்கத்துல்லா மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் மருதாச்சல மூர்த்தி, செந்தில் முருகன் மற்றும் கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.