/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இறப்புகளை 21 நாட்களுக்குள் பதிவு செய்யுங்கள்: தாசில்தார் இறப்புகளை 21 நாட்களுக்குள் பதிவு செய்யுங்கள்: தாசில்தார்
இறப்புகளை 21 நாட்களுக்குள் பதிவு செய்யுங்கள்: தாசில்தார்
இறப்புகளை 21 நாட்களுக்குள் பதிவு செய்யுங்கள்: தாசில்தார்
இறப்புகளை 21 நாட்களுக்குள் பதிவு செய்யுங்கள்: தாசில்தார்
ADDED : செப் 25, 2025 11:19 PM
திருவாடானை:இறப்புகளை 21 நாட்களுக்குள் பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டும் என பொதுமக்களுக்கு தாசில்தார் அறிவுரை வழங்கியுள்ளார்.
திருவாடானை தாசில்தார் ஆண்டி கூறியதாவது: பொது மக்கள் சிலர் உறவினர்கள் உயிரிழந்து சில நாட்களில் விண்ணப்பிப்பதில்லை. சொத்து பிரித்தல் அல்லது பிற அரசு சேவைகள் தொடர்பாக தேவைப்படும் போது விண்ணப்பிக்கின்றனர். இதனால் இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதில் தேவையில்லாத காலதாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க வீட்டில் முதியவர்கள், உறவினர்கள் இறந்தால் 21 நாட்களுக்குள் வி.ஏ.ஓ. அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டும்.
காலதாமதமாக பதிவு செய்ய சென்றால் காலதாமத கட்டணம் செலுத்தி முறையான விசாரணைக்கு பின் இறப்பு சான்றிதழ் வழங்கப்படும். எனவே இறப்புகளை 21 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். அதே போல் பிறப்பு சான்றிதழ் பெறும் போது பெற்றோர் பலர் பெயர் பதிவு செய்யாமல் இருந்து விடுகின்றனர்.
பள்ளியில் சேர்க்கும் போது அல்லது பிற வருவாய் சான்றிதழ்கள் வாங்கும் போது சிலர் குழந்தைகள் பெயரை பதிவு செய்ய வருகின்றனர். இதனால் கால தாமதம் ஏற்படும். இதனை தவிர்க்க குழந்தைகள் பிறந்து ஓராண்டிற்குள் பெயரை சான்றிதழில் பதிவு செய்ய வேண்டும் என்றார்.