/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாயமான ராமநாதபுரம் இன்ஜினியர் திண்டுக்கல் சிறுமலையில் தற்கொலை மாயமான ராமநாதபுரம் இன்ஜினியர் திண்டுக்கல் சிறுமலையில் தற்கொலை
மாயமான ராமநாதபுரம் இன்ஜினியர் திண்டுக்கல் சிறுமலையில் தற்கொலை
மாயமான ராமநாதபுரம் இன்ஜினியர் திண்டுக்கல் சிறுமலையில் தற்கொலை
மாயமான ராமநாதபுரம் இன்ஜினியர் திண்டுக்கல் சிறுமலையில் தற்கொலை
ADDED : செப் 24, 2025 08:40 AM
திண்டுக்கல் : மாயமான ராமநாதபுரம் இன்ஜினியர் திண்டுக்கல் சிறுமலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்தவர் மரியான் சிமியோன் 28. பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்து விட்டு குரோஷியாவில் பணியாற்றி வந்தார். செப்.,3ல் தாயகம் திரும்பி வீட்டிற்கு வந்தவர் சென்னை சென்று வருவதாக கூறி சென்றார். இதன்பின் வீடு திரும்ப வில்லை. தங்கச்சிமடம் போலீசார் அவரை தேடிய நிலையில் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை 17 வது கொண்டை ஊசி வளைவில் மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது.
அழுகிய நிலையில் இருந்த உடலை திண்டுக்கல் தாலுகா போலீசார் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.