/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பழுப்பு நிறத்தில் வந்த குடிநீரால் மக்கள் அச்சம் பழுப்பு நிறத்தில் வந்த குடிநீரால் மக்கள் அச்சம்
பழுப்பு நிறத்தில் வந்த குடிநீரால் மக்கள் அச்சம்
பழுப்பு நிறத்தில் வந்த குடிநீரால் மக்கள் அச்சம்
பழுப்பு நிறத்தில் வந்த குடிநீரால் மக்கள் அச்சம்
ADDED : செப் 25, 2025 11:21 PM

முதுகுளத்துார்:முதுகுளத்துார் அருகே அ.நெடுங்குளம் கிராமத்தில் காவிரி குடிநீர் துர்நாற்றத்துடன் பழுப்பு நிறத்தில் வந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
முதுகுளத்துார் அருகே அ.நெடுங்குளம் கிராமத்தில் 120க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு பல நாட்களாக காவிரி குடிநீர் வரவில்லை. மக்கள் சிரமப்பட்டனர். குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். நேற்று கே.ஆர்.பட்டினம் காவிரி குடிநீர் நீரேற்று நிலையத்திலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கிராமத்தில் குழாயில் வந்த போது துர்நாற்றத்துடன் பழுப்பு நிறத்தில் வந்தது.
இதனை கண்ட மக்கள் அச்சமடைந்தனர். குடிநீரை பயன்படுத்தினால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் டிராக்டர் தண்ணீருக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் வந்தும் எந்த பயனும் ஏற்படவில்லை. அப்பகுதி மக்கள் கூறியதாவது:
அ.நெடுங்குளம் கிராமத்தில் காவிரி குடிநீர் இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றோம். பல நாட்களுக்கு பிறகு திறந்து விடப்பட்ட தண்ணீரும் பழுப்பு நிறத்தில் வந்ததால் பயன்படுத்த முடியவில்லை. எனவே முறையாக குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து கிராமத்திற்கு துாய்மையான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.