ADDED : அக் 05, 2025 04:12 AM

பரமக்குடி : பெருங்கரை ஆதி சக்தி ராஜ ராஜேஸ்வரி சக்தி பீடத்தில் தசரா விழா, சூரசம்ஹாரம் நடந்தது.
கோயிலில் கணபதி ஹோமத்துடன் விழா துவங்கி தினமும் கொலு மண்டபத்தில் அம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி ஏந்தி சென்ற னர். மேலும் விஜயதசமி விழாவையொட்டி சப்த கன்னிகள் மேளதாளத்துடன் புறப்பட்டு அம்மன் சூரசம்ஹார லீலையில் வைகை ஆற்றின் படித்துறை வந்தார். அம்மனுக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டு கோயிலை அடைந்தார். ஏற்பாடுகளை சக்தி பீடத்தின் விஜயேந்திர சுவாமிகள் செய்திருந்தனர்.


