Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு அமர இருக்கைகள்  அமைக்காதது ஏன் ரூ.20 கோடி செலவழித்தும் அவல நிலை

புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு அமர இருக்கைகள்  அமைக்காதது ஏன் ரூ.20 கோடி செலவழித்தும் அவல நிலை

புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு அமர இருக்கைகள்  அமைக்காதது ஏன் ரூ.20 கோடி செலவழித்தும் அவல நிலை

புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு அமர இருக்கைகள்  அமைக்காதது ஏன் ரூ.20 கோடி செலவழித்தும் அவல நிலை

ADDED : அக் 05, 2025 04:13 AM


Google News
ராமநாதபுரம் : ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் ரூ.20 கோடியில் கட்டப்பட்டும் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அமர்வதற்கான இருக்கை வசதிகள் அமைக்கப்படவில்லை.

ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப் பணிகள் ரூ.20 கோடியில் முடிந்து முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இங் கிருந்து வெளியூர்களுக்கு செல்லும் விரைவு பஸ்கள், நகர பஸ்களுக்கு என தனித்தனி ரேக் அமைக்கப் பட்டுள்ளது.

ஓரிரு நாட்களில் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து அனைத்து பஸ்களும் இயக்கப்படும் என அதி காரிகள் தெரிவித்தனர். பஸ் ஸ்டாண்டில் பயணிகள் காத்திருக்கும் பகுதியில் போதிய அளவில் இருக்கைகள் அமைக்கப்படாதது பயணிகளிடையே ஏமாற்றத்தை அளித்து உள்ளது.

இது குறித்து பயணிகள் கூறியதாவது:

புதிய பஸ் ஸ்டாண்ட் கூடுதல் இடவசதியுடன் அதிக பஸ்கள் வரும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. அதேநேரத்தில் பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் பகுதியில் இருக்கைகள் இல்லை. பெயருக்கு இரண்டு இடத்தில் 10க்கும் குறைவான இருக்கைகள் உள்ளன.

ராமநாதபுரத்தில் இருந்து மதுரை, ராமேஸ்வரம், வேளாங்கண்ணி, துாத்துக்குடி உள்ளிட்ட வெளியூர்களுக்கு ஒரு நாளைக்கு நுாற்றுக்கணக்கானோர் பயணிக்கின்றனர். கிராமப்புறங்களில் இருந்து ராமநாதபுரத்திற்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் பகுதியில் குறைவான இருக்கைகள் உள்ளன. அந்த இருக்கையும் தனி அறையிலும், வாளாகத்திற்குள்ளும் உள்ளதால் பயணிகளுக்கு பஸ் வருவது தெரியாமல் போகும்.

அதனால் கிராமப்புறங் களுக்கு செல்வோர் அதை பயன்படுத்துவது குறைவு. பஸ் ஸ்டாண்டின் ஒவ்வொரு நடைமேடை யின் ஓரத்தில் இருக்கைகள் அமைத்தால் பயணிகள் எளிதாக பஸ்கள் வருவதை அறிய முடியும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us