/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கீழக்கிடாரம் கண்மாயில் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு வருவாய்த் துறையினர் ஆய்வு கீழக்கிடாரம் கண்மாயில் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு வருவாய்த் துறையினர் ஆய்வு
கீழக்கிடாரம் கண்மாயில் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு வருவாய்த் துறையினர் ஆய்வு
கீழக்கிடாரம் கண்மாயில் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு வருவாய்த் துறையினர் ஆய்வு
கீழக்கிடாரம் கண்மாயில் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு வருவாய்த் துறையினர் ஆய்வு
ADDED : செப் 25, 2025 11:21 PM
சிக்கல்: சிக்கல் அருகே கீழக்கிடாரம் பாசன கண்மாயில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதாக நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக உடனடியாக வருவாய்த்துறையினர் கண்மாயில் ஆய்வு செய்தனர்.
சிக்கல் அருகே கீழக்கிடாரம் பாசன கண்மாய் 2850 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கண்மாய் வடக்கு பகுதியில் உள்ள வரத்து கால்வாய் இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் தண்ணீர் செல்ல முடியாத அளவிற்கு துார்ந்து போயிருந்தது. இந்நிலையில் தனி நபர்கள் பாசன கண்மாயின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர்.
இது குறித்து நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கடலாடி தாசில்தார் பரமசிவன் தலைமையில் வருவாய் துறையினர் கண்மாய் பகுதியை ஆய்வு செய்தனர். ஆக்கிரமிப்பு உள்ள இடங்களை சர்வேயர் மூலம் அளந்து அப்பகுதியில் அரசுக்கு சொந்தமான இடங்களை தெளிவுபடுத்தி விட்டு சென்றனர்.
மேலும் அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து விவசாயம் மற்றும் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு விடுத்தனர்.