/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கோ-ஆப் டெக்ஸ் நிறுவன தீபாவளி சிறப்பு தள்ளுபடி கோ-ஆப் டெக்ஸ் நிறுவன தீபாவளி சிறப்பு தள்ளுபடி
கோ-ஆப் டெக்ஸ் நிறுவன தீபாவளி சிறப்பு தள்ளுபடி
கோ-ஆப் டெக்ஸ் நிறுவன தீபாவளி சிறப்பு தள்ளுபடி
கோ-ஆப் டெக்ஸ் நிறுவன தீபாவளி சிறப்பு தள்ளுபடி
ADDED : செப் 25, 2025 11:22 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கோ--ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தீபாவளி பண்டிகைக்கான 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா நடைபெற்றது.கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
மென் பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், நவீன காலத்திற்கு உகந்த ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. கடந்த ஆண்டு ரூ.32 லட்சத்து 28 ஆயிரம் தீபாவளி விற்பனை நடந்தது. நடப்பு ஆண்டில் ரூ.50 லட்சத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மண்டல மேலாளர் ஸ்டாலின், துணை மண்டல மேலாளர் தீபா, விற்பனை நிலைய மேலாளர் பாண்டியம்மாள், நகராட்சி கவுன்சிலர் இந்திராமேரி பங்கேற்றனர்.