/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வருவாய்த்துறை அலுவலர்கள்காத்திருப்பு போராட்டம் வருவாய்த்துறை அலுவலர்கள்காத்திருப்பு போராட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள்காத்திருப்பு போராட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள்காத்திருப்பு போராட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள்காத்திருப்பு போராட்டம்
ADDED : செப் 25, 2025 11:22 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை புறக்கணித்து, இம்முகாம்களை தொடர்ந்து நடத்துவதை கண்டித்து கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிக்குமார் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுக்களை முடிவு செய்ய போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் பணி நெருக்கடிகள் ஏற்படுத்துவதை கைவிட வேண்டும். திட்டத்தை செயல்படுத்த கூடுதல் பணியிடங்கள், அடிப்படை கட்டமைப்பு வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டது. தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், நில அளவர்கள், ஆய்வாளர், வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர்.