Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ போதை கடத்தல் வழக்கில் சிக்கி இந்தியா வந்த இலங்கை போலீஸ்காரருக்கு 2 ஆண்டு சிறை

போதை கடத்தல் வழக்கில் சிக்கி இந்தியா வந்த இலங்கை போலீஸ்காரருக்கு 2 ஆண்டு சிறை

போதை கடத்தல் வழக்கில் சிக்கி இந்தியா வந்த இலங்கை போலீஸ்காரருக்கு 2 ஆண்டு சிறை

போதை கடத்தல் வழக்கில் சிக்கி இந்தியா வந்த இலங்கை போலீஸ்காரருக்கு 2 ஆண்டு சிறை

ADDED : செப் 24, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்:போதைப்பொருள் திருடிய வழக்கில் தலைமறைவாகி தமிழகத்திற்கு கள்ளப்படகில் வந்த இலங்கை போலீஸ்காரருக்கு2ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி மெகபூப் அலிகான் உத்தரவிட்டார். ஏற்கனவே 5 ஆண்டுகள் சிறப்பு முகாமில் இருந்ததை கணக்கில் கொண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இலங்கை மொனராகல் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதீப் குமார் பண்டாரா 35. இவர் இலங்கை போலீசில் 2018 ல் பணியில் சேர்ந்துள்ளார்.

இவரது அண்ணன் அனுர குமார என்பவரை 23 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக இலங்கை போலீசார் 2020 ஆக., 26ல் கைது செய்தனர்.

இலங்கை துறைமுகம் காவல் நிலையத்தில் போலீசார் கைப்பற்றி வைத்திருந்த போதைப்பொருளை பிரதீப்குமார் பண்டாரா திருடி தனது சகோதரருக்கு கொடுத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

இதையறிந்த பிரதீப் குமார் பண்டாரா அங்கிருந்து தப்பி 2020 செப்.,5ல் தனுஷ்கோடி வந்தார்.

அங்கு ரோந்து பணியில் இருந்த மண்டபம் கடற்கரை போலீசார் பிரதீப் குமார் பண்டாராவை பிடித்தனர்.

அவரை வெளி நாட்டினர் சட்டம் 1946, பாஸ்போர்ட் விதிகள் 1950 ஆகிய சட்டத்தின் கீழ் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

அதன் பின் வழக்கு ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. சிறையில் இருந்த பிரதீப் குமார் பண்டாரா ஜாமின் பெற்று திருச்சியில் வெளி நாட்டினரை தங்க வைக்கும் சிறப்பு முகாமிற்கு மாற்றப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி மெகபூப் அலிகான் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

கள்ளத்தனமாக எவ்வித ஆவணங்களுமின்றி இந்தியா வந்தகுற்றத்திற்காக2ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2000 அபராதம் விதித்தும், 5 ஆண்டுகள்சிறப்பு முகாமில்இருந்து வந்ததை தண்டனை காலமாக கருதி தற்போது அவரைவிடுதலை செய்வதாகவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

இலங்கை துாதரகம் மூலம் அவரை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என பிரதீப் குமார் பண்டாரா தரப்பு வழக்கறிஞர் பழனிக்குமார் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us