/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவம் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவம்
எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவம்
எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவம்
எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவம்
ADDED : மே 25, 2025 07:29 AM

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 223வது வைகாசி பிரம்மோற்ஸவ விழா மே 31ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்தியமான பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது.
இங்கு வைகாசி பிரம்மோற்ஸவ விழா மே 31 காலை 8:00 மணிக்கு கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது.
அன்று மாலை அன்ன வாகனத்தில் பெருமாள் உலா வருகிறார். மேலும் தினமும் பல்லக்கு, சிம்மம், சேஷ, கருட, அனுமந்த, யானை வாகனத்தில் வீதி உலா வருவார்.
ஜூன் 6 காலை ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று இரவு பூப் பல்லக்கில் வீதிவலம் நடக்கிறது.
ஜூன் 7 வெண்ணைத்தாழி கண்ணன் அலங்காரம், மறுநாள் அதிகாலை குதிரை வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் வேடப்பாரியாகம் நடக்கிறது.
ஜூன் 8 மாலை தேரோட்டமும், மறுநாள் தீர்த்தவாரி மற்றும் கொடி இறகத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை சவுராஷ்டிர சபை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.