/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பட்டா பெயர் மாற்ற லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., கைது பட்டா பெயர் மாற்ற லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., கைது
பட்டா பெயர் மாற்ற லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., கைது
பட்டா பெயர் மாற்ற லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., கைது
பட்டா பெயர் மாற்ற லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., கைது
ADDED : மே 14, 2025 02:47 AM

முதுகுளத்துார்:சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவைச் சேர்ந்த ஒருவர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் தாலுகா கீழக்கொடுமலுாரில் தந்தை பெயரில் உள்ள இடத்திற்கு தன் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ஒரு மாதத்திற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பித்தார்.
இரு வாரங்களுக்கு முன் கீழக்கொடுமலுார் வி.ஏ.ஓ., சரவணன் அவரிடம் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.3000 லஞ்சம் கேட்டார். முன்பணமாக ரூ.1000 ஆன்லைனில் பெற்றார். மீதம் ரூ.2000த்தை பெற முதுகுளத்துார் தாலுகா அலுவலகம் அருகே உள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு வரும்படி அந்த நபரிடம் கூறினார்.
மேலும் பணம் கொடுக்க விரும்பாத அந்த நபர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் கூறியபடி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வி.ஏ.ஓ., சரவணனிடம் அந்த நபர் கொடுத்த போது மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக சரவணனை கைது செய்தனர்.