ADDED : அக் 07, 2025 07:40 AM

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த ஒருவருக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 30 ஆண்டுகளுக்கு முன், 3 சென்ட் இடத்திற்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதை தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய வேந்தோணி வி.ஏ.ஓ., செல்வகுமார், 44, என்பவரை அணுகினார்.
அப்போது, வி.ஏ.ஓ., 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால், லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைபடி, நேற்றிரவு ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வி.ஏ.ஓ.,விடம் அவர் வழங்கினார். அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார், வி.ஏ.ஓ.,வை கைது செய்தனர்.


