Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தங்கும் விடுதிகள் பெயரில் இணையதளங்கள் மோசடி

தங்கும் விடுதிகள் பெயரில் இணையதளங்கள் மோசடி

தங்கும் விடுதிகள் பெயரில் இணையதளங்கள் மோசடி

தங்கும் விடுதிகள் பெயரில் இணையதளங்கள் மோசடி

ADDED : அக் 07, 2025 07:18 AM


Google News
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில், தங்கும் விடுதிகள் பெயரில், போலி இணையதளங்கள் உருவாக்கி மோசடி நடப்பதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில், 120க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. இதில், 50க்கும் மேலான விடுதிகளில் அனைத்து தர வசதியும் உள்ளதால், இந்த விடுதிகளின் இணையதளத்தில் பக்தர்கள், சுற்றுலா பயணியர் ஆன்லைனில் புக் செய்து, முன்பணம் செலுத்தி தங்குகின்றனர்.

இந்நிலையில், மோசடி கும்பல் சிலர், ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் கோவில் அருகில் ஒரு சில விடுதிகளின் பெயரில் போலி வெப்சைட் உருவாக்கி, அந்த விடுதியின் அறைகள் போல படங்களை இணையதளத்தில் வைத்து, ரூம் புக்கிங் செய்து பணம் வசூலிக்கின்றனர்.

இது தெரியாத பக்தர்கள், சம்பந்தப்பட்ட விடுதிக்கு வந்து போலி ஆன்லைனில் புக் செய்த ரசீதை காட்டுகின்றனர். அது போலி என விடுதி ஊழியர்கள் கூறுவதால், பயணியர் ஏமாற்றப்பட்டது தெரிந்து புலம்புகின்றனர்.

இதுகுறித்து, விடுதி உரிமையாளர்கள் சைபர் கிரைம் போலீசிடம் புகார் செய்துள்ளனர்.

வி.எச்.பி., மண்டல அமைப்பாளர் சரவணன் கூறுகையில், ''திருக்கோவில் பெயரில் போலி வெப்சைட் உருவாக்கி பக்தர்களிடம் பணம் வசூலித்த கும்பல் குறித்து கோவில் அதிகாரி போலீசிடம் புகார் அளித்தும், குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதனால் மோசடி கும்பலிடம் பக்தர்கள் பணத்தை பறிகொடுக்கும் சம்பவம் தொடர்ந்த வண்ணம் உள்ளது,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us