/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கடை ஒதுக்குவதற்கு வி.சி.க., கோரிக்கை கடை ஒதுக்குவதற்கு வி.சி.க., கோரிக்கை
கடை ஒதுக்குவதற்கு வி.சி.க., கோரிக்கை
கடை ஒதுக்குவதற்கு வி.சி.க., கோரிக்கை
கடை ஒதுக்குவதற்கு வி.சி.க., கோரிக்கை
ADDED : செப் 25, 2025 03:34 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்டில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு கடை ஒதுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வலியுறுத்தினர்.
அக்கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் அற்புதக்குமார் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் புதுபஸ் ஸ்டாண்டில் கடைகள் ஏலத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான இட ஒதுக்கீடு முறை பின்பற்றவில்லை. எனவே பழங்குடியினர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சமூக பிரிவில் உள்ளவர்களுக்கு கடை வழங்க வேண்டும். புதிய பஸ் ஸ்டாண்டிற்கு இம்மானுவேல் சேகரன் பெயர் சூட்ட வேண்டும்.
இல்லையெனில் அனைத்து அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களை ஒருங்கிணைத்து செப்.,29, 30 ல் ராமநாதபுரம் வரும் முதல்வர் ஸ்டாலின் செல்லும் இடங்களில் கருப்புகொடி காட்டும் போராட்டம் நடத்துவோம் எனக்கூறியுள்ளார்.