ADDED : செப் 25, 2025 03:36 AM
ராமநாதபுரம் : அழகன்குளம் ஆதி காமாட்சியம்மன் கோயிலில் விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழா நடந்தது.கணபதி பூஜையுடன் ஆதி காமாட்சியம்மனுக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து விஸ்வ பிரம்ம சுவாமி படத்திற்கு மலர் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம், இளைஞர் சங்கம், மகளிர் மன்றத்தினர் செய்தனர்.