ADDED : அக் 24, 2025 01:27 AM
சேந்தமங்கலம், அக்கியம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள குரு ராகவேந்திரா பிருந்தாவனத்தில், நேற்று குரு வார வழிபாடு நடந்தது.
மூலவர் குரு ராகவேந்திரா மற்றும் பரிவார தெய்வங்களான லட்சுமி நரசிம்மர், விநாயகர், ராமர், சீதை மற்றும் மகாலட்சுமி சுவாமிகளுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.


