/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அரசு கருவூலம் மூலம் ஊதியம் ஊராட்சி செயலர்கள் வலியுறுத்தல் அரசு கருவூலம் மூலம் ஊதியம் ஊராட்சி செயலர்கள் வலியுறுத்தல்
அரசு கருவூலம் மூலம் ஊதியம் ஊராட்சி செயலர்கள் வலியுறுத்தல்
அரசு கருவூலம் மூலம் ஊதியம் ஊராட்சி செயலர்கள் வலியுறுத்தல்
அரசு கருவூலம் மூலம் ஊதியம் ஊராட்சி செயலர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 16, 2024 05:30 AM
வாழப்பாடி : தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வாழப்பாடி அடுத்த மின்னாம்பள்ளியில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற பின், மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் கூறியதாவது:
ஊராட்சி செயலர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், அரசு கருவூலம் மூலம் வழங்க வேண்டும். அதேபோல் தேர்வு நிலை ஊதியம் வழங்க வேண்டும். தமிழக அரசின் பென்ஷன் திட்டத்தில் சேர்க்க வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஓய்வூதியம், 2,000 ரூபாயை, 10,000 ரூபாயாகவும், ஒட்டுமொத்த தொகை, 1 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்குதல் உள்பட, 10 அம்ச கோரிக்கைகள், கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மாநில பொதுச்செயலர் வேல்முருகன், பொருளாளர் மகேஸ்வரன், மாவட்ட தலைவர் சிவசங்கர் உள்பட பலர் உடனிருந்தனர்.