/உள்ளூர் செய்திகள்/சேலம்/ முறைகேடாக மாத்திரை விற்ற 'பார்மசிஸ்ட்' கைது முறைகேடாக மாத்திரை விற்ற 'பார்மசிஸ்ட்' கைது
முறைகேடாக மாத்திரை விற்ற 'பார்மசிஸ்ட்' கைது
முறைகேடாக மாத்திரை விற்ற 'பார்மசிஸ்ட்' கைது
முறைகேடாக மாத்திரை விற்ற 'பார்மசிஸ்ட்' கைது
ADDED : ஜூலை 26, 2024 02:09 AM
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டையில், வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி போதைக்கு, ஊசி மூலம் உடலில் செலுத்துவதாக புகார் வந்தது. இதனால் செவ்வாய்பேட்டை போலீசார் விசாரித்து, அஸ்-தம்பட்டியை சேர்ந்த ரமேஷ் உள்பட, 6 பேரை கைது செய்தனர். ரமேஷிடம் விசாரித்தபோது கோவையில் இருந்து வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி விற்றது தெரிந்தது. அவருக்கு மாத்திரை விற்றவரை பிடிக்க தனிப்படை போலீசார் கோவையில் முகா-மிட்டு தேடி வந்தனர்.
இந்நிலையில், கோவை, சிங்காநல்லுார், உப்பிலிபாளையத்தை சேர்ந்த, பார்மசிஸ்ட் செல்வராஜ், 47, என்பவர், மருந்து கம்பெ-னியில் இருந்து வலி நிவாரண மாத்திரைகளை அனுமதியின்றி வாங்கி சேலம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு விற்றது தெரிந்-தது. நேற்று, அவரை போலீசார் கைது செய்தனர்.