Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/18 கிராமங்களுக்கு செல்லும் மண்சாலை தார்ச்சாலையாக மாற்ற உண்ணாவிரதம்

18 கிராமங்களுக்கு செல்லும் மண்சாலை தார்ச்சாலையாக மாற்ற உண்ணாவிரதம்

18 கிராமங்களுக்கு செல்லும் மண்சாலை தார்ச்சாலையாக மாற்ற உண்ணாவிரதம்

18 கிராமங்களுக்கு செல்லும் மண்சாலை தார்ச்சாலையாக மாற்ற உண்ணாவிரதம்

ADDED : பிப் 01, 2024 10:25 AM


Google News
ஏற்காடு: ஏற்காடு, மாரமங்கலம் ஊராட்சியில் உள்ள கொட்டச்சேடு முதல் அரங்கம் வரை, 18 கிராம மக்கள், 6ம் நம்பர் பீல்டு சாலையை தார்ச்சாலையாக மாற்றி அமைக்க, போராடி வந்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம், 7ம் நம்பர் பீல்டில் சாலை அமைத்தது. இது, 18 கிராமங்களுக்கு பலனின்றி ஒரு கிராமத்துக்கு மட்டும் பயனாக உள்ளதாகவும், சாலை அமைக்கும் இடம் எஸ்டேட் என்பதால் எஸ்டேட் முதலாளிகளுக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகம் செயல்படுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், 6ம் நம்பர் பீல்டில் உள்ள மண் சாலையை தார்ச்சாலையாக மாற்றி தரக்கோரி, கிராம மக்கள், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் இணைந்து, ஒண்டிக்கடையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலர் கோவிந்தன் தொடங்கி வைத்தார். மாவட்ட துணைத்தலைவர் தியாகராஜன், தோட்ட தெழிலாளர் சங்க மாவட்ட தலைவர் இளங்கோ, மாரமங்கலம் ஊராட்சி தலைவர் மாதையன் உள்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க போவதாக எச்சரித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us