குட்டையை ஒட்டி 2 ஏக்கர் நிலம் மீட்பு
குட்டையை ஒட்டி 2 ஏக்கர் நிலம் மீட்பு
குட்டையை ஒட்டி 2 ஏக்கர் நிலம் மீட்பு
ADDED : ஜூன் 21, 2025 12:44 AM
கெங்கவல்லி, கெங்கவல்லி, ஆணையாம்பட்டி ஊராட்சி ஆணையாம்பட்டி புதுாரில், கல் உடைச்சான் குட்டையை ஒட்டி, 2 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக, கடந்த மே மாதம், கலெக்டர் பிருந்தாதேவியிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நேற்று, கெங்கவல்லி தாசில்தார் நாகலட்சுமி தலைமையில் வருவாய்த்துறையினர், போலீசார், பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். தொடர்ந்து, அந்த இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என, தாசில்தார் எச்சரித்தார்.