ADDED : ஜூன் 21, 2025 12:44 AM
தலைவாசல், தலைவாசல், மணிவிழுந்தான் ஊராட்சி ராமானுஜபுரத்தை சேர்ந்த விவசாயி நாச்சிமுத்து, 75. நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, தென்னை மரத்தில் இருந்து விழுந்த மட்டையை எடுத்துள்ளார்.
அதில் இருந்த, விஷத்தன்மை கொண்ட கதண்டு ஈக்கள், நாச்சிமுத்துைவை சூழ்ந்து கொட்டியது. 100க்கும் மேற்பட்ட கதண்டுகள் கொட்டியதில், படுகாயமடைந்த நாச்சிமுத்து, மயங்கி விழுந்தார். ஆத்துார் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.