Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கும்பாபிேஷக திருப்பணிக்கு இடையூறாக இருந்த 3 கடை இடிப்பு

கும்பாபிேஷக திருப்பணிக்கு இடையூறாக இருந்த 3 கடை இடிப்பு

கும்பாபிேஷக திருப்பணிக்கு இடையூறாக இருந்த 3 கடை இடிப்பு

கும்பாபிேஷக திருப்பணிக்கு இடையூறாக இருந்த 3 கடை இடிப்பு

ADDED : செப் 25, 2025 02:05 AM


Google News
சேலம்,சேலம், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷக திருப்பணி, 1 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது.

அங்கு கட்டுமான பொருட்களை கனரக வாகனங்களில் எடுத்து வர வசதியாக, கோவிலுக்கு சொந்தமான கடைகளில் துாண்கள் இல்லாத இடத்தில் உள்ள, 3 கடைகளை இடித்து அகற்றி வழி ஏற்படுத்த முடிவு செய்தனர். அதற்கு வாடகைக்கு உள்ளவர்கள் காலி செய்ய மறுக்கவே, செயல் அலுவலர் கலைச்செல்வி, ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் சபர்மதி தலைமையிலான தீர்ப்பாயத்தில் முறையிட்டார்.

இரு தரப்பையும் விசாரித்த பின், 3 கடைகளை, 15 நாட்களில் காலி செய்து ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டு, நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அப்போதும் காலி செய்யாததால், நேற்று சேலம் உதவி கமிஷனர் ராஜா தலைமையில் அதிகாரிகள், போலீசார், தீயணைப்புத்துறை பாதுகாப்புடன், பொக்லைன் மூலம், 3 கடைகள் இடித்து அகற்றப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us