/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இன்று முதல் ஈரோடு - ஜோக்பானி அம்ரித் பாரத் ரயில் சேவை தொடக்கம் இன்று முதல் ஈரோடு - ஜோக்பானி அம்ரித் பாரத் ரயில் சேவை தொடக்கம்
இன்று முதல் ஈரோடு - ஜோக்பானி அம்ரித் பாரத் ரயில் சேவை தொடக்கம்
இன்று முதல் ஈரோடு - ஜோக்பானி அம்ரித் பாரத் ரயில் சேவை தொடக்கம்
இன்று முதல் ஈரோடு - ஜோக்பானி அம்ரித் பாரத் ரயில் சேவை தொடக்கம்
UPDATED : செப் 25, 2025 02:46 AM
ADDED : செப் 25, 2025 02:45 AM
சேலம் :ஈரோடு - ஜோக்பானி அம்ரித் பாரத் ரயில், இன்று முதல் வழக்கமான சேவையை தொடங்குகிறது.இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை:
ஈரோடு - ஜோக்பானி இடையே, 'அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்' ரயில் சேவை, கடந்த., 15ல் தொடங்கப்பட்டது. இதன் வழக்கமான சேவை, இன்று முதல் தொடங்குகிறது.
அதன்படி, ஈரோடு - ஜோக்பானி அம்ரித் பாரத் வார ரயில், வியாழன் காலை, 8:10க்கு புறப்பட்டு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், விஜயவாடா, நாக்பூர், ஜபல்பூர் வழியே, சனி இரவு, 7:00 மணிக்கு, பீகார் மாநிலம் ஜோக்பானியை அடைகிறது. மறுமார்க்க ரயில், ஞாயிறு மதியம், 3:15க்கு கிளம்பி, புதன் காலை, 7:20க்கு ஈரோட்டை அடையும். இதில், 8 ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி, 11 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.