Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ துரோணா 3ம் கண் யோகாவில் கண்களை மூடி சாதிக்க பயிற்சி

துரோணா 3ம் கண் யோகாவில் கண்களை மூடி சாதிக்க பயிற்சி

துரோணா 3ம் கண் யோகாவில் கண்களை மூடி சாதிக்க பயிற்சி

துரோணா 3ம் கண் யோகாவில் கண்களை மூடி சாதிக்க பயிற்சி

ADDED : அக் 05, 2025 01:17 AM


Google News
சேலம், சேலம், ஸ்வர்ணபுரி, சசி கண் மருத்துவமனை முதல் தளத்தில், துரோனா மூன்றாவது கண் யோகா மையம், 2020 முதல் செயல்பட்டு வருகிறது. அங்கு மனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது, அதை சரியான பயிற்சி மூலம் எப்படி வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை தர முடியும் என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கப்படுகிறது.

பயிற்சி பெற்ற சிறுவர், சிறுமியர் கண்களை துணியால் கட்டிக்கொண்டு நிறைய வண்ணங்களை கண்டுபிடித்தல், பொருட்களை அடையாளம் காணுதல், எழுத்துகளை வாசித்தல், சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட திறன்களை வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக, 20, 23, 53 கி.மீ.,க்கு, கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டி, உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த மையத்தில் அனைத்து தரப்பினரும் பயிற்சி பெற்று, சாதனை செய்யலாம். இதுகுறித்த விபரங்களுக்கு, 'அருள் முருகன் பழனி, துரோணா, 3வது கண் யோகா மையம், சசி கண் மருத்துவமனை, ஸ்வர்ணபுரி, சேலம்' எனும் முகவரியை அணுகலாம். மேலும், -83442 15000, 96985 23217 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us