/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பஸ்சில் மாணவியை சீண்டியவர் ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் கைது பஸ்சில் மாணவியை சீண்டியவர் ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் கைது
பஸ்சில் மாணவியை சீண்டியவர் ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் கைது
பஸ்சில் மாணவியை சீண்டியவர் ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் கைது
பஸ்சில் மாணவியை சீண்டியவர் ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் கைது
ADDED : செப் 20, 2025 03:17 AM
சேலம்:பஸ்சில் மாணவியை சீண்டிய நபரை ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்டறிந்து போலீசார் கைது செய்தனர்.
சேலம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் இருந்து, செப்., 16ல் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு வந்த அரசு பஸ்சில் பயணித்த நர்சிங் மாணவியிடம், ஒருவர் சில்மிஷம் செய்தார்.
இதுகுறித்து, கண்டக்டரிடம் மாணவி தெரிவித்தும், அவர் கண்டுகொள்ளவில்லை.
மாணவி, அவரது பெற்றோரிடம் தெரிவிக்க, உறவினர் களுடன் பழைய பஸ் ஸ்டாண்ட் வந்தனர். சீண்டியவர் தப்பினார்.
கண்டக்டர் திருமுருகன், 44, டிரைவர் தனபால், 52, ஆகியோரிடம் வாக்குவாதம் செய்து, இருவரையும் மாணவியின் உறவினர்கள் தாக்கினர். இது குறித்த புகாரில், பெற்றோர் உட்பட மூவரை, டவுன் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், பஸ்சில் சீண்டியவர் குறித்து ஒருவரது உருவம், 'சிசிடிவி'யில் பதிவாகியிருந்தது. ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் அந்த நபரின் சரியாக தெரியாத உருவத்தை பதிந்து தேடியபோது, கிச்சிப் பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் முரளி, 48, என, தெரிந்தது.
சென்னை, ரெட்ஹில்ஸ் பகுதியில் பதுங்கி இருந்த முரளியை டவுன் போலீசார் கைது செய்தனர்.