/உள்ளூர் செய்திகள்/சேலம்/ காரில் 280 கிலோ புகையிலை கடத்தியோர் கைது காரில் 280 கிலோ புகையிலை கடத்தியோர் கைது
காரில் 280 கிலோ புகையிலை கடத்தியோர் கைது
காரில் 280 கிலோ புகையிலை கடத்தியோர் கைது
காரில் 280 கிலோ புகையிலை கடத்தியோர் கைது
ADDED : செப் 20, 2025 01:28 AM
ஓமலுார் :சேலம் தனிப்பிரிவு போலீசார், ஓமலுார் அருகே புளியம்பட்டியில் நேற்று இரவு, 7:00 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடகா பதிவெண் கொண்ட 'யுனோவா' காரை நிறுத்தி சோதனை செய்தபோது, 19 மூட்டைகளில், 280 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன.
காருடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், காரில் வந்த, பெங்களூரு ஆணைக்கால் பகுதியை சேர்ந்த முனியப்பா, 36, ஆனந்த், 32, ஆகியோரை கைது செய்து, ஓமலுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.