ADDED : செப் 26, 2025 02:23 AM
சேலம்:கிருஷ்ணகிரி மாவட்ட பெரியார் திராவிட கழக மாவட்ட அமைப்பாளர் பழனி, 2012ல் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார், இ.கம்யூ., - தளி தொகுதி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், அவரது அண்ணன் வரதராஜன் உள்பட, 20க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடக்கிறது. அதில், எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் உள்பட, 19 பேர் நேற்று, நீதிமன்றத்தில் ஆஜராகினர். மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, வழக்கு விசாரணையை அக்., 9க்கு ஒத்திவைத்தார்.