/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கூட்டணி குறித்து 15 நாட்களில் அறிவிப்பு பா.ம.க., மாநில ஒருங்கிணைப்பாளர் தகவல் கூட்டணி குறித்து 15 நாட்களில் அறிவிப்பு பா.ம.க., மாநில ஒருங்கிணைப்பாளர் தகவல்
கூட்டணி குறித்து 15 நாட்களில் அறிவிப்பு பா.ம.க., மாநில ஒருங்கிணைப்பாளர் தகவல்
கூட்டணி குறித்து 15 நாட்களில் அறிவிப்பு பா.ம.க., மாநில ஒருங்கிணைப்பாளர் தகவல்
கூட்டணி குறித்து 15 நாட்களில் அறிவிப்பு பா.ம.க., மாநில ஒருங்கிணைப்பாளர் தகவல்
ADDED : செப் 24, 2025 01:29 AM
சேலம் :பா.ம.க.,வின் சேலம் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், 5 ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலர் நாராயணன் தலைமை வகித்தார். அதில், மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி, புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு, 'சால்வை' அணிவித்தார்
.தொடர்ந்து அவர் பேசியதாவது: பா.ம.க., உட்கட்சி விவகாரங்கள் குறித்து, தொண்டர்கள் குழப்பம் அடைய தேவையில்லை. 2026 தேர்தல் தொடர்பான பேச்சு நடக்கிறது. இன்னும், 15 நாட்களில் யாருடன் கூட்டணி என்பது குறித்து நல்ல தகவலை, பா.ம.க., தலைவர் அன்புமணி வெளியிடுவார்.
மேலும் வன்னியர்களுக்கு, 10.5 சதவீத இட ஒதுக்கீடு போராட்டத்தில், தமிழகம் முழுதும், 15 லட்சம் பேர் பங்கேற்க தயாராக உள்ளனர். சேலம் மாவட்டத்தில் இப்போராட்டத்தில் திரளானோர் பங்கேற்க தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட தலைவர் சிவராமன், மாணவர் சங்க மாநில தலைவர் விஜயராசா உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்றனர்.