/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கடத்திச்சென்று தாக்கப்பட்ட வாலிபர் சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் கடத்திச்சென்று தாக்கப்பட்ட வாலிபர் சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
கடத்திச்சென்று தாக்கப்பட்ட வாலிபர் சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
கடத்திச்சென்று தாக்கப்பட்ட வாலிபர் சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
கடத்திச்சென்று தாக்கப்பட்ட வாலிபர் சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
ADDED : செப் 20, 2025 01:20 AM
சேலம், சேலம், திருமலைகிரி, இடும்பன் வட்டத்தை சேர்ந்த வெங்கடேஷின் இளைய மகன் மோகன்ராஜ், 20. வெள்ளி தொழிலாளி. கடந்த ஜூலையில், வேடுகாத்தாம்பட்டி, பாறைவட்டத்தில், அதே ஊரை சேர்ந்த ஒரு தரப்பினருக்கும், மோகன்ராஜ் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து இரும்பாலை போலீசார் விசாரித்தனர்.
கடந்த, 16ல், மோகன்ராஜ், அவரது வீட்டில் நண்பர் சிவானந்தனுடன் இருந்தார். அப்போது, 15 பேர் கும்பல் பைக்கில் வந்து, மோகன்ராஜ், சிவானந்தத்தை பைக்கில் கடத்தி சென்று தாக்கினர். கத்தியால் மோகன்ராஜ் தலையில் வெட்டினர். படுகாயம் அடைந்த இருவரும், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
போலீசார் விசாரித்து, வேடுகாத்தாம்பட்டியை சேர்ந்த காளியப்பன், 24, தங்கராஜ், 30, பாறைவட்டம் சூர்யா, 21, பிரகாஷ், 19, இரு சிறுவர்கள் உள்பட, 8 பேரை கைது செய்தனர். இந்நிலையில் மருத்துவ மனையில் மோகன்ராஜ், நேற்று உயிரிழந்தார். இதனால் கொலை வழக்காக மாற்றி, போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆனால் மோகன்ராஜின் உறவினர்கள், உடலை வாங்க மறுத்து, கலெக்டர் அலுவலகம் அருகே மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தி, 'வீடியோ ஆதாரம் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதி அளித்தனர். இதனால் உறவினர்கள், உடலை பெற்று சென்றனர்.