/உள்ளூர் செய்திகள்/சேலம்/ உழுத நிலமாக மாறிய மாட்டுச்சந்தை வளாகம் உழுத நிலமாக மாறிய மாட்டுச்சந்தை வளாகம்
உழுத நிலமாக மாறிய மாட்டுச்சந்தை வளாகம்
உழுத நிலமாக மாறிய மாட்டுச்சந்தை வளாகம்
உழுத நிலமாக மாறிய மாட்டுச்சந்தை வளாகம்
ADDED : செப் 20, 2025 01:20 AM
ஓமலுார், ஓமலுார், முத்துநாயக்கன்பட்டி அருகே பெருமாள்கோவில்மேடு மாட்டுச்சந்தை வெள்ளிதோறும் கூடுகிறது. இங்கு சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளம், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் மாடுகளை கொண்டு வருகின்றனர்.
பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கும் நிலையில், இரு நாட்களாக பெய்த மழையால், சந்தை வளாகம் நேற்று உழுத நிலம் போல் காணப்பட்டது. மேலும் பல வாகனங்கள் சேற்றில் சிக்கி பின் தள்ளி எடுத்துச்சென்றனர். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காதபடி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.