/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தி காவிரி பொறியியல் கல்லுாரியில் கருத்தரங்கம் தி காவிரி பொறியியல் கல்லுாரியில் கருத்தரங்கம்
தி காவிரி பொறியியல் கல்லுாரியில் கருத்தரங்கம்
தி காவிரி பொறியியல் கல்லுாரியில் கருத்தரங்கம்
தி காவிரி பொறியியல் கல்லுாரியில் கருத்தரங்கம்
ADDED : செப் 26, 2025 02:05 AM
மேச்சேரி :மேச்சேரி தி காவிரி பொறியியல் கல்லுாரி கணினி அறிவியல் மற்றும் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் தடயவியல் துறைகள், ஐ.எஸ்.டி., இணைந்து, 'கிளவுட் மற்றும் ஐ.ஓ.டி., நெட்வொர்க் டிராபிக் சிமுலேஷன் பேசிக்ஸ் யூசிங் என்.எஸ்., 2' தலைப்பில் கருத்தரங்கை நடத்தின. கல்லுாரி செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினரான யுனைடெட் சாப்ட் டெக் -சேலம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி கார்த்திக், என்.எஸ்., 2 உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளித்து பேசினார். முன்னதாக, கணினி அறிவியல் துறைத்தலைவர் பாலமுருகன், சிறப்பு விருந்தினரை வரவேற்றார்.
தி காவிரி கல்வி நிறுவன கவுரவ தலைவர் நடேசன், தலைவர் அன்பழகன், துணைத்தலைவர் மதன் கார்த்திக், தாளாளர் ராமநாதன், ஒருங்கிணைப்பாளர் ரேவதி, செயல் அலுவலர் கருப்பண்ணன், பேராசிரியர் நந்தகுமார், முதல்வர் துரைசாமி, துணை பேராசிரியர்கள் ரம்யா, பரமேஸ்வரி, மோகனப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.