/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நந்தா பொறியியல் கல்லுாரியில் ஆசிரியர், பொறியாளர் தின விழா நந்தா பொறியியல் கல்லுாரியில் ஆசிரியர், பொறியாளர் தின விழா
நந்தா பொறியியல் கல்லுாரியில் ஆசிரியர், பொறியாளர் தின விழா
நந்தா பொறியியல் கல்லுாரியில் ஆசிரியர், பொறியாளர் தின விழா
நந்தா பொறியியல் கல்லுாரியில் ஆசிரியர், பொறியாளர் தின விழா
ADDED : செப் 20, 2025 01:28 AM
ஈரோடு, முனைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான ஆசிரியர் தினம், சர் மோக் ஷ குண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளான, பொறியாளர் தினம் ஆகிய தினங்கள், ஈரோடு நந்தா பொறியியல் கல்லுாரியில் கொண்டாடப்பட்டது. நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். சேலம் நாலேட்ஜ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் நிர்வாக தலைவர் சீனிவாசன், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.
நந்தா பொறியியல் கல்லுாரி முதல்வர் ரகுபதி, இரு பெரும் மேதைகளை நினைவு கூர்ந்து பேசினார். தொடர்ந்து அனைவரும், ராதாகிருஷ்ணன், விஸ்வேஸ்வரய்யா புகைப்படங்களுக்கு மலர் துாவி மரியாதை செய்தனர்.
கடந்த கல்வியாண்டில் சிறந்த ஆராய்ச்சி, பொறியியல் துறை நிறுவனங்களுக்கு சிறந்த ஆலோசனை, கற்பித்தலில் புதுமை, சிறந்த துறைத்தலைவர் உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பான முறையில் செயல்பட்ட பேராசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.நந்தா கல்வி அறக்கட்டளை அங்கத்தினர் பானுமதி, செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவன செயலர் திருமூர்த்தி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம், நிர்வாக அலுவலர் வேலுசாமி, புல முதல்வர்கள், துறைத்தலைவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.