Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நாளை ஷீரடி சாய்பாபா புண்ணிய திதி

நாளை ஷீரடி சாய்பாபா புண்ணிய திதி

நாளை ஷீரடி சாய்பாபா புண்ணிய திதி

நாளை ஷீரடி சாய்பாபா புண்ணிய திதி

ADDED : அக் 01, 2025 02:01 AM


Google News
சேலம்:விஜயதசமியை முன்னிட்டு, சேலம், சூரமங்கலம், முல்லை நகர் சாய்பாபா பிரார்த்தனை ஸ்தலத்தில், கடந்த, 25ல், கொடியேற்றத்துடன் ஆத்ம ஜோதி ஏற்றி, நாமஸ்மரணத்துடன் புண்ணிய திதி தொடங்கியது. தொடர்ந்து நாளை வரை பஜனை நடக்கிறது.

குறிப்பாக நாளை காலை, 8:00 மணிக்கு மகா அபிேஷகம், அலங்காரம் நடக்க உள்ளது. 10:00 மணிக்கு, டாக்டர் விஜயலட்சுமி குழுவினரின் சாய் பஜனை, மதியம், 12:00 மணிக்கு ஆரத்தி, 1:00 மணிக்கு ஆத்ம ஜோதி சமர்ப்பணம், மாலை, 4:00 மணிக்கு தரிசனம், 6:00 மணிக்கு துாப ஆரத்தி வழிபாடு, இரவு, 7:00 மணிக்கு மாதவி லதாவின் கீர்த்தனை, 9:00 மணிக்கு ஆரத்தி நிகழ்ச்சி நடக்க உள்ளது.

அன்று தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை ஷீரடி சாய் சேவா டிரஸ்ட் மேற்கொண்டு வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us