/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மின்கம்பத்தில் சிக்கிய பஸ்; அலறியடித்து ஓடிய பயணிகள் மின்கம்பத்தில் சிக்கிய பஸ்; அலறியடித்து ஓடிய பயணிகள்
மின்கம்பத்தில் சிக்கிய பஸ்; அலறியடித்து ஓடிய பயணிகள்
மின்கம்பத்தில் சிக்கிய பஸ்; அலறியடித்து ஓடிய பயணிகள்
மின்கம்பத்தில் சிக்கிய பஸ்; அலறியடித்து ஓடிய பயணிகள்
ADDED : ஜூலை 29, 2024 11:31 PM

திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் குறுகிய வளைவில் திரும்பும் போது தனியார் பஸ் மின்கம்பத்தில் சிக்கி கொண்டதால் பயணிகள் அலறியடித்து இறங்கி ஓடினர்.
மதுரையில் இருந்து திருப்புவனம் வழியாக நரிக்குடி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு தனியார் பஸ் தினசரி சென்று வருகிறது. இந்த வழித்தடத்தில் ஏராளமான கிராமங்களை இணைக்கும் பஸ் என்பதால் எப்போதும் பஸ்சில் கூட்டம் அதிகமாக காணப்படும்.
நேற்று இரவு 7:00 மணிக்கு அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை புறப்பட்ட பஸ் நரிக்குடி ரோட்டில் இருந்து மெயின் ரோட்டில் திரும்பும் போது ரோட்டின் இடது பக்கம் உள்ள இரும்பு மின்கம்பத்தில் சிக்கி கொண்டது. இதனால் மின்கம்பம் வழியாக சென்ற உயர் மின் அழுத்த கம்பி ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பொறி பறந்தது.
இதனை கண்ட பயணிகள் பஸ்சை விட்டு இறங்கி ஓடினர். மேலும் மின்கம்பத்தில் தெருவிளக்கிற்காக பொருத்தப்பட்ட இரும்பு கம்பி பஸ்சின் கூரையில் சிக்கி கொண்டது. பஸ்சில் இருந்து கண்டக்டர் இறங்கி எடுக்க முயன்றும் முடியவில்லை. இதனால் நரிக்குடி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரை மணி நேரத்திற்கு பின் பஸ்சை மெதுவாக முன்னும் பின்னும் நகர்த்தி வெளியே எடுத்தனர். ஏற்கனவே தெரு விளக்கு எரிந்து கொண்டிருந்த போது தனியார் பஸ் சிக்கி கொண்டதால் மின்சார பல்பு உடைந்தது. இன்று வரை அதனை சரி செய்யாமல் வெறுமனே கம்பி மட்டும் காட்சி பொருளாக இருந்து வருகிறது.