Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சென்னை ரயில்கள் செங்கல்பட்டில் நிறுத்தம்

சென்னை ரயில்கள் செங்கல்பட்டில் நிறுத்தம்

சென்னை ரயில்கள் செங்கல்பட்டில் நிறுத்தம்

சென்னை ரயில்கள் செங்கல்பட்டில் நிறுத்தம்

ADDED : ஜூலை 16, 2024 05:06 AM


Google News
காரைக்குடி : சென்னை செல்லும் ரயில்கள் ஜூலை 23ம் தேதி முதல் 27 நாட்களுக்கு செங்கல்பட்டில் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துஉள்ளது.

தெற்கு ரயில்வே சென்னை கோட்ட போக்குவரத்து அதிகாரி ஜெரின் ஜி ஆனந்த் தெரிவித்துள்ளதாவது:

காரைக்குடியில் இருந்து அதிகாலை சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரயில் ஜூலை 23 முதல் ஆக.,18ம் தேதி வரை செங்கல்பட்டில்நிறுத்தப்படும். மறு மார்க்கத்தில் செங்கல்பட்டில் இருந்து புறப்படும்.

தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு திருவாரூர் வழியாக செல்லும்விரைவு ரயில் ஜூலை 21 முதல் ஆக.13 வரை விழுப்புரத்தில் இருந்து புறப்படும் என்றும், மறு மார்க்கத்தில் செங்கோட்டை-தாம்பரம் செல்லக்கூடிய விரைவு ரயில் ஜூலை 22 முதல் ஆக 14 வரை விழுப்புரம்ரயில் நிலையத்திற்கு மட்டுமே செல்லும்.

மேலும் சென்னை- செங்கோட்டை செல்லும் சிலம்பு விரைவு ரயில் இரண்டு மார்க்கத்திலும் ஆக.16 மற்றும் 17 ஆகிய இரு தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை-ராமேஸ்வரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் ஆக.15, 16 மற்றும் 17 ஆகிய 3 நாட்கள் செங்கல்பட்டில் இருந்து புறப்படும். தவிர சென்னையிலிருந்து தினசரி திருச்சி வரும் ராக்போர்ட் அதிவிரைவு ரயில் இடமும் தேதியும் மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us