/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிவகங்கை மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா சிவகங்கை மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா
சிவகங்கை மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா
சிவகங்கை மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா
சிவகங்கை மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா
ADDED : ஜூலை 16, 2024 05:06 AM
சிவகங்கை : சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.
பள்ளி செயலர் சேகர் தலைமை வகித்தார். பொறியாளர்கள் மகேந்திரன், பாரதிதாசன், சுந்தரமாணிக்கம், முத்துப்பாண்டியன், கட்டுமான தொழிலாளர் நலவாரிய துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் காமராஜர் சிறப்புகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். கலை நிகழ்ச்சி நடந்தது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.தலைமை ஆசிரியர் தியாகராஜன், உடற்கல்வி ஆசிரியர் தடியப்பன், சரவணன், ஆசிரியர்கள் சந்திரசேகர், மகரஜோதி, சக்திவேல், ஜெயமணி கலந்து கொண்டனர்.
சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். ஆசிரியர் ரேவதி வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
* சிவகங்கை பால முருகன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடந்த விழாவில் ஆசிரியை கமலி வரவேற்றார். பள்ளி நிர்வாகி குமார் சிறப்புரையாற்றினார். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. ஏற்பாட்டை ேஹமலதா செய்திருந்தார்.
* சாய் பாலமந்திர் நர்சரிமற்றும் பிரைமரி பள்ளியில் நடந்த விழாவிற்கு ஆசிரியை மதிவாணி வரவேற்றார். நிர்வாகி குமார் சிறப்புரையாற்றினார். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. ஏற்பாட்டை மீனுப்பிரியா செய்திருந்தார்.
கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தெய்வானை தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். ஆசிரியர் மீனாட்சி வரவேற்றார். ஆசிரியர் வித்யா நன்றி கூறினார்.
சோழபுரம் ஸ்ரீ ரமண விகாஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு தாளாளர் முத்துக்கண்ணன் தலைமை வகித்தார். ஆசிரியர் செல்வகண்ணாத்தாள் வரவேற்றார். சிவகங்கை லயன்ஸ் சங்கத் தலைவர் விஸ்வநாதன், செயலாளர் தனபாலன், பொருளாளர் சந்திரசேகரன் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
சக்கந்தி ஸ்ரீ சக்தி மழலையர் தொடக்கப்பள்ளியில் தாளாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு காமராஜர் குறித்து வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
தேவகோட்டை சேர்மன்மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் முத்துலட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
நாட்டரசன்கோட்டை கானாடுகாத்தான் முத்தையா சுப்பையா செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர்பொறுப்பு மீனாட்சி சுந்தரிதலைமை வகித்தார். பள்ளி மேலாளர் சுப்பையா கலந்துகொண்டார். மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் சிவகாமி நன்றி கூறினார்.
காங்., சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.காமராஜர் சிலைக்கு மாவட்ட தலைவர் சஞ்சய்காந்தி தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.
நகர் தலைவர் விஜயகுமார், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரெத்தினம்,பொதுக்குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி, சோணை, மாநில இளைஞர் காங்., பொதுசெயலாளர் ராஜீவ் பாரமலை, மாநில மகளிர் காங்., துணை தலைவி ஸ்ரீவித்யா, வட்டார தலைவர் மதியழகன், மாவட்ட மகளிர் காங்., தலைவி இமய மெடோனா, மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கிய சாந்தாராணி, கவுன்சிலர் மகேஷ்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் சண்முகராஜன், மோகன்ராஜ் கலந்துகொண்டனர்
மானாமதுரை: மிளகனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா தலைமை ஆசிரியர் சேவியர் ஆரோக்கியதாஸ் தலைமையில் நடந்தது. ஆசிரியை கீதா வரவேற்றார்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இடைநிலை ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.
* மானாமதுரை பாபா மெட்ரிக், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறுவனர் ராஜேஸ்வரி,தாளாளர் கபிலன், நிர்வாகி மீனாட்சி மற்றும்ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை முதல்வர் சாரதா, பொறுப்பாசிரியர் பாண்டியம்மாள் செய்திருந்தனர்.
தேவகோட்டை: தேவகோட்டை என்.எஸ்.எம்.வி.பி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் வெங்கடாசலம் தலைமையில் நடந்தது. முன்னாள் தமிழ்த்துறை தலைவர் அருணாசலம் காமராஜர் பற்றி பேசி போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.
* சேவுகன் அண்ணாமலை மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பள்ளி தலைவர் லட்சுமணன் தலைமையில் நடந்தது. ஆசிரியை சுமதி வரவேற்றார். காஸ்மாஸ் லயன்ஸ் பட்டயத் தலைவர் தட்சிணாமூர்த்தி பேசினார். பள்ளி முதல்வர் ஸ்ரீதேவி தொகுத்து வழங்கினார்.
* ராமகிருஷ்ண வித்யாலய நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி தலைமையில் நடந்தது. மாணவர்கள் காமராஜர் பற்றி பேசினர். ஆசிரியர் ஹேமா நன்றி கூறினார்.
* ராம்நகர் ஆக்ஸ்வர்டு மழலையர் மற்றும் தொடக்க பள்ளியில் தாளாளர் விஜயன் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் அமுதா ராணி வரவேற்றார். ஆசிரியை மணிமேகலை தொகுத்து வழங்கினார்.
* 16வது வார்டு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடந்தது. தேவகோட்டை அரிஸ்டோ லயன்ஸ் சங்க பட்டயத் தலைவர் ராமராஜ் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை வணக்கமேரி வரவேற்றார். மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் ஆறுமுகம் சீருடை வழங்கினார்.
திருப்புத்துார்: திருப்புத்துார் பாபா அமிர் பாதுஷா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் அமீர்பாதுஷா தலைமை வகித்தார். முதல்வர் வரதராஜன் வரவேற்றார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொருளாளர் ஜீவானந்தம் சிறப்புரையாற்றினார். பசுமை பாரத இயக்க நிர்வாகி இன்ஜினியர் அருணாசலம், பேராசிரியர் சுப்பிரமணியன், ஆசிரியை பவித்ரா காமராஜர் குறித்து பேசினர். கலை நிகழ்ச்சி நடந்தது.ஆசிரியை சந்தான லெட்சுமி நன்றி கூறினார்.
கீழச்செவல்பட்டி ஆர்.எம்.மெய்யப்ப செட்டியார் மெட்ரிக் பள்ளியில் தாளாளர் பழனியப்பன்தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் அழகுமணிகண்டன் முன்னிலை வகித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி, போட்டி நடந்தது. வென்றவர்களுக்கு எஸ்.புதுார் முன்னாள் ஒன்றிய தலைவர் பரிசுகள் வழங்கினார். முதல்வர் குணாளன் நன்றி கூறினார்.
காரைக்குடி: அமராவதிப்புதுார் ராஜராஜன் கல்விக் குழுமத்தில் நடந்த விழாவில் முன்னாள் துணைவேந்தர் எஸ். சுப்பையா பேசினார். பள்ளி முதல்வர் வாசுகி, பேராசிரியர்பாலசுந்தரி கல்லுாரி முதல்வர்கள் சிவக்குமார், சுஷில்குமார், சிவக்குமார் பேசினர்.
காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. காமராஜர் குறித்த பேச்சுப்போட்டி மற்றும் கவிதை போட்டி நடந்தது.பள்ளி தாளாளர் சேதுராமன் முதன்மை முதல்வர் அஜய் யுத்தேஷ் முதல்வர் பரமேஸ்வரி பரிசு வழங்கி பாராட்டினர்.
காரைக்குடி முத்துக்கருப்பன் விசாலாட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் திருநாவுக்கரசு தலைமையேற்றார். உதவி தலைமையாசிரியர் ஜான் சகாய ஸ்டீபன் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
கல்லல் முருகப்பா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் அழகப்பன் தலைமையேற்றார். முதுகலை ஆசிரியர் பாரதிதாசன், தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி. காரைக்குடி அரிமா சங்கம் முத்து கணேசன் கலந்து கொண்டனர்.