/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அரசு கல்லுாரியில் கலந்தாய்வு சேர்க்கை அரசு கல்லுாரியில் கலந்தாய்வு சேர்க்கை
அரசு கல்லுாரியில் கலந்தாய்வு சேர்க்கை
அரசு கல்லுாரியில் கலந்தாய்வு சேர்க்கை
அரசு கல்லுாரியில் கலந்தாய்வு சேர்க்கை
ADDED : ஜூலை 29, 2024 10:51 PM

சிவகங்கை : பிளஸ் 2 துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இளைநிலைப் பட்ட வகுப்புகளுக்கான சேர்க்கை நாளை நடைபெற உள்ளது.
மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மன்னர் அரசு துரைசிங்கம்கலைக் கல்லுாரியில் சேர்ந்து பயன் அடையலாம் என கல்லுாரி முதல்வர் துரையரசன் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், மாணவர்கள் கலந்தாய்வுக்கு காலை 9:00 மணிக்கு கல்லுாரிக்கு வரவேண்டும். கலந்தாய்விற்கு வரும்பொழுது மாற்றுச் சான்றிதழ், 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச்சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம்ஆகியவற்றின் ஒரிஜினல் மற்றும் 3 நகல்களுடன் 5 போட்டோக்களும் கொண்டு வரவேண்டும்.
மேலும் 2024--25 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை பட்ட படிப்பிற்கு ஜூலை 27 முதல் ஆக.7 வரை www.tngasa.in என்ற இணையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இக்கல்லுாரியில் முதுநிலை பாடப்பிரிவுகள் தமிழ், ஆங்கிலம், வரலாறு,பொருளியல், வணிகவியல், வேதியியல், இயற்பியல், கணிதம், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணினி அறிவியல் முதல் சுழற்சியில் மட்டும் உள்ளன. மாணவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.