ADDED : ஜூலை 29, 2024 10:52 PM

சிவகங்கை : விவசாய கூலி தொழிலாளர்கள் வயது 60க்கு பின் மாதம் ரூ.3 ஆயிரம் பென்ஷன் வழங்க வலியுறுத்தி, சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சங்க மாவட்ட தலைவர்மணியம்மா தலைமை வகித்தார். செயலாளர் பொன்னுச்சாமி முன்னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் தனசேகரன், செயலாளர் முத்துக்கருப்பன், பொருளாளர் மகாலிங்கம் முன்னிலை வகித்தனர்.
மத்திய அரசு 2025--26வது பட்ஜெட்டில் வேலை உறுதி திட்டத்திற்கு ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். வயது 60 நிறைவடைந்த விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3000 பென்ஷன் வழங்க வேண்டும்.
வேலை உறுதி திட்ட அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும், 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். தினசரி சம்பளம் ரூ.319 யை முழுமையாக வழங்கு. வேலை உறுதி திட்டங்களுக்கு வரும் நிதியை பிற துறைகளுக்கு மாற்றிவிடக்கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஒன்றிய குழு உறுப்பினர் ஆண்டியப்பன் நன்றி கூறினார்.