Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் திறப்பு

திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் திறப்பு

திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் திறப்பு

திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் திறப்பு

ADDED : ஜூலை 29, 2024 10:50 PM


Google News
Latest Tamil News
திருப்புவனம் : திருப்புவனத்தில் ரூ.5 கோடியே 56 லட்ச ரூபாய் செலவில் நவீன வசதியுடன் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்ட ஒன்றிய அலுவலக கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன், எம்.எல்.ஏ., தமிழரசி, ஊராட்சி ஒன்றிய தலைவர் சின்னையா, துணை தலைவர் மூர்த்தி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் ஆகியோர் புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றினர்.

விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், திருப்புவனத்தின் நீண்ட நாள் பிரச்னையான பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்காக ஆகஸ்ட் 1ம் தேதி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. விரைவில் திருப்புவனத்தில் பஸ் ஸ்டாண்ட் கட்டப்படும், என்றார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் சி.பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.திட்ட இயக்குனர்சிவராமன், மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் வி.கேசவதாசன், தாசில்தார் விஜயகுமார்,வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) எஸ்.அருள்பிரகாசம், மேலாளர் குமரேஸ்வரன், ஒன்றிய கவுன்சிலர்கள் மொ. ராமு, ஆ.வைத்தீஸ்வரி, இ.தஸ்லிம், ம.மீனாட்சி, ஆ. பழனியப்பன், ஜெ.இந்திரா,மு.முருகேஸ்வரி, சி.ராசு, க.பாலசுப்ரமணியன், ரா.பிரியா, சு.சுப்பையா, சி.பூமாதேவி, ந.ஜெயசித்ரா, க.மகாலட்சுமி, ஆ.ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us