ADDED : ஜூலை 29, 2024 10:50 PM

மானாமதுரை : ம.தி.மு.க., 31ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மானாமதுரை ஒன்றிய நகர பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது.
மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., பூமிநாதன், மாவட்ட செயலாளர் பசும்பொன் மனோகரன் ஆகியோர் கொடி ஏற்றி வைத்தனர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அசோக், நகர செயலாளர் கண்ணன்,தகவல் தொழில்நுட்ப அணி மருது பாண்டியன், நிர்வாகிகள் தனுஷ்கோடி, பாண்டியன், மணியரசன், பிரபு, சர்தார், இளஞ்செழியன், கர்ணன், கருப்புசாமி, இளங்கோ கலந்து கொண்டனர்.