/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புவனம் தாலுகா அலுவலகத்தை புறக்கணிக்கும் டவுன் பஸ்கள் பயணிகள் பரிதவிப்பு திருப்புவனம் தாலுகா அலுவலகத்தை புறக்கணிக்கும் டவுன் பஸ்கள் பயணிகள் பரிதவிப்பு
திருப்புவனம் தாலுகா அலுவலகத்தை புறக்கணிக்கும் டவுன் பஸ்கள் பயணிகள் பரிதவிப்பு
திருப்புவனம் தாலுகா அலுவலகத்தை புறக்கணிக்கும் டவுன் பஸ்கள் பயணிகள் பரிதவிப்பு
திருப்புவனம் தாலுகா அலுவலகத்தை புறக்கணிக்கும் டவுன் பஸ்கள் பயணிகள் பரிதவிப்பு
ADDED : ஜூலை 16, 2024 11:58 PM
திருப்புவனம் : திருப்புவனம் தாலுகா அலுவலக பஸ் ஸ்டாப்பில் டவுன் பஸ்கள் நிற்காததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
திருப்புவனத்தைச் சுற்றிலும் நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இக்கிராமமக்கள் தினசரி பல்வேறு கோரிக்கைகளுடன் திருப்புவனம் தாலுகா அலுவலகம் வந்து செல்கின்றனர். தாலுகா அலுவலகம் பரமக்குடி ரோட்டில் அமைந்துள்ளது. திருப்புவனம் வந்து டவுன் பஸ்கள் மூலம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டும், இது தவிர தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களும் டவுன் பஸ்சை நம்பியே அலுவலகம் வந்து செல்கின்றனர்.
திருப்புவனத்தில் இருந்து தாலுகா அலுவலகம் செல்லும் டவுன் பஸ்களில் சென்றால் தாலுகா அலுவலகத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் நிறுத்த மறுக்கின்றனர்.
இதனால் ஷேர் ஆட்டோவில் 15 ரூபாய் கொடுத்து பயணம் செய்ய வேண்டியுள்ளது. தாலுகா அலுவலகம் வழியாக திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல், லாடனேந்தல், விளத்துார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க மறுக்கின்றனர்.
இது குறித்து பல முறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. கிராமங்களில் இருந்து வரும் மக்கள் பலரும் பஸ்களை நிறுத்தாததால் நடந்தே தாலுகா அலுவலகம் சென்று வருகின்றனர்.
எனவே போக்குவரத்து கழக அதிகாரிகள் தாலுகா அலுவலக வாசலில் பஸ்களை நிறுத்தாமல் செல்லும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.