/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஏல நகைகளை வாங்கி வியாபாரம் ரூ.4 லட்சம், 51 பவுன் மோசடி ஏல நகைகளை வாங்கி வியாபாரம் ரூ.4 லட்சம், 51 பவுன் மோசடி
ஏல நகைகளை வாங்கி வியாபாரம் ரூ.4 லட்சம், 51 பவுன் மோசடி
ஏல நகைகளை வாங்கி வியாபாரம் ரூ.4 லட்சம், 51 பவுன் மோசடி
ஏல நகைகளை வாங்கி வியாபாரம் ரூ.4 லட்சம், 51 பவுன் மோசடி
ADDED : செப் 26, 2025 02:06 AM
காரைக்குடி:காரைக்குடியில் வங்கிகளில் ஏலத்திற்கு வரும் நகைகளை வாங்கி வியாபாரம் செய்யலாம் என கூறி, ரூ.4 லட்சம், 51 பவுன் நகையை பெற்று மோசடி செய்ததாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா 46. இவரிடம், வங்கிகளில் விடப்படும் ஏல நகைகளை வாங்கி விற்பனை செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆனந்துாரைச் சேர்ந்த சகோதரர்களான ஷேக் நிஜாமுதீன், காஜா நிஜாமுதீன், காரைக்குடி கழனிவாசல் கமால் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி அப்துல்லா 2022 ம் ஆண்டு ரூ.7 லட்சம், 51 பவுன் நகையை கொடுத்துள்ளார். வியாபாரமும் செய்யாமல், கொடுத்த பணம், நகையை திரும்ப தராமல், மூவரும் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, ரூ.3 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதமுள்ள பணம் நகைகளை தரவில்லை.
பலமுறை கேட்டும் கொடுக்காததால், அப்துல்லா காரைக்குடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.