ADDED : செப் 26, 2025 02:01 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் காளையார்கோவில் ஊராட்சியில் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி வழங்குதல் தொடர்பான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ராதிகா தலைமை வகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், துணை வட்டாட்சியர் தர்மராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ைஹதர் அலி, மாவட்ட சமூகநல அலுவலக ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி சந்தியா, மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் வினோதினி, ஊராட்சி செயலாளர் மதனகோபால் கலந்து கொண்டனர்.